
பேராக் மாநிலத்தை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்முறை தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
75 வயதான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு நவம்பர் 20 ஆம் தேதி இறைவன் அருளால் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று முழுவதும் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்
சுங்கை கந்தானில் தொடங்கும் அவரின் பிரச்சாரம் உலு கிந்தாவில் நடக்கும் தீபாவளி பண்டிகை இன்னிசை விழாவில் முடிகிறது.
இந்தியர்கள் வாக்குகளை கவரும் வகையில் அவர் இன்று உலு கிந்தா தீபாவளி கலைவிழா வில் மேடை ஏறுகிறார். இவரின் வருகைக்காக இந்தியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.