
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு, ஏப்ரல் 6-
கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜசெகவை சேர்ந்த லீ கீ ஹியோங் புற்றுநோயால் காலமானதை தொடர்ந்து இப்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது .
கடந்த 2013ஆம் ஆண்டு கோல குபு பாரு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லீ, கடந்த மூன்று தவணைகளாக இந்த தொகுதியை தன் வசம் வைத்திருந்தார்.
வரும் மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே இம்முறை கடுமையான போட்டி நிலவுகிறது.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக பெண் வேட்பாளரை களத்தில் இறங்குகிறது என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
செலாயாங் மாவட்ட கவுன்சிலர் புவான் எலிஸ் சூ போங் தாய் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவான் லோ சுவாப் பெங் ஆகியோர் மத்தியில் இப்போது கோலகுபு பாரு மாவட்ட கவுன்சிலர் சரிபா பக்கார் பெயரும் அடிபடுகிறது.
50 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் இருப்பதால்
இறுதி நேரத்தில் சரிபா பக்கார் வேட்பாளராக நிறுத்த ஜசெக காய்களை நகர்த்தி வருகிறது என்று கூறப்படுகிறது