
காஜாங், ஏப்ரல் 6-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமை துறை அரசு சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு மைபிபிபி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
ஒற்றுமை அரசு சார்பில் பக்கத்தான் ஹராப்பான் போட்டியிடுகிறது.
இம்முறையும் ஜசெக தனது வேட்பாளரை நிறுத்தலாம்.
இந்த தொகுதியில் மீண்டும் ஒற்றுமை அரசு வேட்பாளர் வெற்றி பெற மைபிபிபி கட்சி ஆதரவை வழங்கும்.
வேட்புமனுத் தாக்கல் தினத்திலும் ஒற்றுமை அரசு வேட்பாளரை ஆதரவாக களத்தில் இறங்குவோம்.
மேலும் கோலகுபு பாருவில் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபடுவோம் என்றார் அவர்.
டத்தோ டாக்டர் லோகபாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு மைபிபிபி உலுலங்காட் தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் இன்று காஜாங்கில் எளிமையான முறையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன், பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார், காப்பார் மைபிபிபி தொகுதி தலைவர் கதீர், சுபாங் மைபிபிபி தொகுதி தலைவர் நந்தா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.