
செ.வே. முத்தமிழ் மன்னன்
சுங்கை சிப்புட், ஜாலோங் சட்டமன்றத்தை சார்ந்த 150 B-40 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான தலா 150 வெள்ளி பெறுமானமுள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினருமான மானமிகு லோ சீ யீ அவர்கள், மொத்தம் 22,500 வெள்ளி மதிப்பிலான TF Value Mart பற்றுச்சீட்டுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வு ஜாலோங் சட்டமன்ற சேவை மைய ஊழியர்கள் மற்றும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரால் நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களால் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டதென ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் நலப்பிரிவு அதிகாரியும், கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினருமான திரு. கோபி அவர்கள் விளக்கினார்.
ஜாலோங் சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய மலாய் கிராமங்களில் வாழும் B-40 குடும்பங்களை அக்கிராம தலைவர்களின் வாயிலாக கண்டறிந்து, அவர்களுக்கு பேராக் மாநில அரசாங்கத்தின் வழி இப்பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் இம்மலேசிய திருநாட்டில், நோன்புப் பெருநாள் ஒரு முக்கிய விழாவாக அனைத்து மலேசியர்களாளும் கொண்டாடப்படுகிறது.
எனவே, பணச்சிக்களை எதிர்நோக்கும் B-40 குடும்பத்தினர்கள் குறிப்பாக அக்குடும்பங்களை சார்ந்த சிறுவர்கள் இக்கொண்டாட்டத்தில் விடுபட்டுவிடாமல் இருக்கவும் அதே வேளையில் அக்குடும்பங்களின் பணச்சிக்களை குறைக்கவும் இதுபோன்ற அரசின் உதவிகள் பெரிதும் உதவுகின்றன என்று மாண்புமிகு லோ சீ யீ அவர்கள் கூறினார்.
நிகழ்வின் இறுதியில் பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும், மாண்புமிகு லோ சீ யீ மற்றும் திரு. இரா. கோபி இருவரும் தங்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.