
ஈப்போ, ஏப்ரல் 8-
ஈப்போ அரசு சாரா இயக்கங்கள், டி.எஸ். நகைக் கடை இணைந்து ஈப்போ ஜாலான் எஸ்.பி.யில் உள்ள சூராவ்வில் அதரவற்ற சிறார்கள், உடல் ஊனமுற்றவர்கள், வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
பேரா இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் மற்றும் பேராக் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தலைமையில் இந்த நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வசதி குறைந்த முஸ்லிம் மக்களுக்கு மட்டுமின்றி இந்து, கிறிஸ்துவ, சீன சமுகத்தைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.