பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு
மானியம் குறைக்கப்பட்டது தொடர்பில்
ம இகா துணிந்து குரல் எழுப்பவில்லை என்கிறார் தியோ நீ சிங்

நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தலா 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.

2019,2020 பட்ஜெட்டில் நிதியமைச்சர் லிம் குவான் எங் தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளியை வழங்கினார்.

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்து விட்டு பின்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில்
2021 இல் தமிழ் பள்ளிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை மட்டுமே வழங்கியிருப்பதாக அக்டோபர் 5 ஆம் தேதி கல்வி அமைச்சு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதேசமயம் 2022 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 75 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

2021 -2022 ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ் பள்ளிகளுக்கு 10 கோடி வெள்ளி கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் 7 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை தமிழ்ப் பள்ளிகள் இழந்து விட்டது என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை கல்வி அமைச்சருமான தியோ நீ சிங் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles