
ஜோகூர் மாநிலத்தில் உள்ள சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் ம இகா தேசிய பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் போட்டியிடுவார் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது.
ஆனால் இந்த தொகுதியை வென்றெடுக்கும் வகையில் இப்போது ம இகா கட்சி டான்ஸ்ரீ இராமசாமியை களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் எதிர்பாராத விதமாக கெஅடிலான் வேட்பாளர் டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாராவிடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டார்.
வெற்றி பெற்ற பின்னர் 22 மாதங்கள் கழித்து டத்தோஸ்ரீ எட்மெண்ட் சந்தாரா அணி தாவினார்.
இதனிடையே கெஅடிலான் கட்சி சார்பில் தேசிய உச்சமன்ற உறுப்பினரும் தெப்ராவ் கெஅடிலான் தொகுதி தலைவருமான யூனிஸ் வரன் சிகாமாட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.