இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்வது தவறு என்றே நான் நினைக்கிறேன். அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது. காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.