
பிரேக் பழுதான குப்பை லோரி சாலை சமிஞை விளக்கில் நின்று கொண்டிருந்த பதினான்கு வாகனங்களை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் 41 வயதான உள்ளூர் குப்பை லோரி ஓட்டுநர் உள்பட யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் கூறினார்.
அந்த குப்பை லோரி ஷா ஆலமில் இருந்து காப்பார் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது
இந்த விபத்தின் எதிரொலியாக அந்த ஓட்டுநர் மீது சிறுநீர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அந்தச் சோதனையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளை அவர் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.