பேராக் மாநிலத்தில் உள்ள தாப்பா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட போகும் கெஅடிலான் கட்சி வேட்பாளர்கள் யார் என்பது இன்று தெரிந்து விடும்.
நேற்று 70 கெஅடிலான் கட்சி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் தாப்பா, சுங்கை சிப்புட் மற்றும் ஜொகூர் செம்பூரோங் தொகுதிக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த மூன்று தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தை தொடர்கிறது. இன்று ஒரு வேளை அறிவிக்கப்படலாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாப்பாவில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் சுங்கை சிப்புட்டில் கேசவன் போட்டியிடுவார்களா என்பது இன்று தெரிந்து விடும்.