அம்பாங் தாமான் கோசாஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி விழாவில் 70 கெஅடிலான் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ரபிஸி ரம்லி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 10,000 பேர் அலையென திரண்டனர்.
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் கருப்பையா,பத்து
வில் பிரபாகரன், கோல லங்காட்டில் மணிவண்ணன், சிகாமாட்டில் யூனிஸ் வரன், சுங்கை பூலோவில் டத்தோ ரமணன், உலு சிலாங்கூரில் டாக்டர் சத்யா பிரகாஷ் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் பெரும் அளவில் மக்கள் கூடியதால் மக்கள் வெள்ளத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திளைத்தார்.