கெஅடிலான் கட்சி சார்பில் நேற்று ஆறு இந்திய வேட்பாளர்களின் பெயர்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டது.
கெடா பாடாங் செராயில் எம். கருப்பையா மீண்டும் போட்டியிடுகிறார்.
சுங்கை பூலோவில் டத்தோ ஆர் ரமணன் போட்டியிடுகிறார்.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் சுங்கை பூலோவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ஆர் சிவராசாவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மற்றும் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன்,
கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் ஜி. மணிவண்ணன், சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் யூனிஸ் வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதனிடையே உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணை தலைவர் ரபிஸி ரம்லிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.