பேராக் மாநிலத்தில் உள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதேசமயம் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் எஸ். கேசவன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
2008,2013 இல் நடைபெற்ற தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
2018இல் நடைபெற்ற தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட கேசவன் வெற்றி பெற்றார்.
2018,2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியில் கேசவன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணி சார்பில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியிடுகிறார்.