
குவா முசாங், ஏப் 25- கெமமான் திரங்கானுவில் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர் ஒருவரை அடித்ததாக நம்பப்படும் வழக்கை விசாரிக்க கல்வி அமைச்சகம் காவல்துறையிடம் கேட்டு கொண்டது.
இந்த வழக்கு தொடர்பாக தனது அமைச்சகம் காவல்துறைக்கு ஒத்துழைக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.
முன்னதாக, 49 வயதான ஆண் ஆசிரியர் இரவு 9.30 மணியளவில் ஆசிரியர் குடியிருப்பில் கைது செய்யப்பட்டதாகத் திரங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
bernama