கெஅடிலான் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்மின் ஆலியுடன் தமக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச் சாட்டை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மறுத்துள்ளார்.
எனக்கும் அஸ்மின் அலிக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை.
அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே நான் கெஅடிலான் கட்சியில் தீவிர அரசியலுக்கு வந்தேன்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் எனக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின் சியூ சீன பத்திரிகையில் வெளிவந்திருக்கும் இந்த செய்தியில் அடிப்படை உண்மைகள் இல்லை.
நம்பிக்கை துரோகி என்று வர்ணிக்கப்படும் அஸ்மின் அலியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.