ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தொடக்கக் கட்டமாக வெ.10,000 நிதியுதவி!

கோலாலம்பூர், ஏப் 25 – லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா10,000 வெள்ளியை முதற்கட்ட உதவி நிதியாக வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நிதியை வழங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொது மக்கள் நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு நிதியை தற்காப்பு அமைச்சு தொடக்கியுள்ளது என்று அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் விமானச் செலவு, மற்றும் இறுதிச் சடங்கு உட்பட அனைத்துச் செலவுகளையும் மலேசிய ஆயுதப் படைகள் ஏற்கும் என்று முகமது காலிட் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles