நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு தழுவிய அளவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று பிரபல சமூக போராட்ட வாதி கே.பி.சாமி தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒரு ஊழல் இல்லாத அரசாங்கத்தை அமைக்க நானும் எனது ஆதரவாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் பாடுபடுவோம்.
நாடு தழுவிய அளவில் பக்கத்தான் ஹரப்பான் அலை வீசுகிறது. அந்த வகையில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்று அவர் சொன்னார்.