15வது பொதுத் தேர்தலில் (GE15) கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் நியமனம் சரியான தேர்வு என்று பிகேஆர் விவரித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் கட்சியின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெற்றி பெற்ற தொகுதியில் சிலாங்கூர் மந்திரி புசார் எளிதாக கைப்பற்ற முடியும் என்று அக்கட்சி நம்புவதாக அதன் தகவல் தொடர்பு இயக்குனர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கத்தையும் சுங்கை துவா மாநில சட்டமன்றத்தையும் நிர்வகிப்பதில் அமிருடின் சிறந்த சாதனை படைத்தவர் என்று போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.