சென்னை: வரும் மே மாதம் 1ம் தேதி முதல், ‘மாற்றம் என்ற சேவை’ என்ற அமைப்பு செயல்பட தொடங்குவதாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பன்முக திறமையாளராக விளங்கும் அவர், பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் படிக்க வைத்த இளைஞர்களில் பலர், தற்போது தங்கள் படிப்புக்குரிய பணியில் சேர்ந்து, சம்பாதிக்க தொடங்கியுள்ளனர்.
எனவே, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில், வரும் மே மாதம் 1ம் தேதி முதல் :மாற்றம் என்ற சேவை’ என்ற அமைப்பு செயல்பட தொடங்குவதாகவும், அதில் தன்னிடம் உதவி பெற்று படித்து முன்னேறிய மாணவர்களில் பலர், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பிறருக்கு உதவ முன்வந்துள்ளனர் என்றும், அதற்காகவே ஆரம்பிக்கப்படுவதுதான் இந்த அமைப்பு என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Ta,il cinema news