ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அஜோசன் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவருக்கு பதிலாக ம இகா தேசிய பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது.
சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அஜோசனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது ஜொகூர் மாநில ம இகா வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று ஸ்டார் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.
சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தப்பட்டுள்ளது.
டத்தோ அஜோசன் ஜொகூர் மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.இவரை
ஓரங்கட்டுவது ஏன் என்று ம இகா கிளைத் தலைவர்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.