
ஜோகூர் பாரு, ஏப்ரல் 29-
சாலை குழியில் விழுந்து காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு
7 லட்சத்து 21,000 வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சாலை பராமரிப்பு நிறுவனத்திற்கு ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது.
40 வயது நிரம்பிய மோட்டார் சைக்கிள் ஓட்டி முகமட் லீ சுயே தமது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் நிரூபித்ததை தொடர்ந்து அவருக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி பாசிர் கூடாங் தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அவர் காயமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.