சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் குற்றம் புரிந்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று மலேசிய தமிழர் குரல் முன்னாள் தலைவர் டேவிட் மார்ஷல் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் சொஸ்மா கைதிகளை விடுதலை செய்ய கோரி இன்று மலேசியா தமிழர் குரல் ஏற்பாட்டில் அமைதி பேரணி நடைபெற்றது.
சபாய் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காமாட்சி துரைராஜ், சிலாங்கூர் மாநில தமிழர் குரல் தலைவர் கணேசன், கலைமுகிலன் உட்பட நூறுக்கும் மேற்பட்ட வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தீவிரவாதிகள் அல்ல.அவர்களை விரைந்து விடுதலை செய்யுங்கள் என்று கலைமுகிலன், காமாட்சி துரைராஜ் வலியுறுத்தினர்.