
நடிகை டாப்ஸி அடுத்து, ‘பிர் ஆயி ஹசீன் தில்ருபா’ மற்றும் ‘கெல் கெல் மேய்ன்’ என்ற இந்திப் படங்களில் நடித்துள்ளார்.
எனக்கு நானே சவாலாக இருக்கிறேன். என்னை நானே சவாலுக்கு உட்படுத்த விரும்புகிறேன். நடிப்பில் சவுகரியமாக நான் உணரும் இடத்தில் இருந்தும் வெளியேறி, சவாலான வேடங்களையே விரும்புகிறேன்.
அதனால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளம் உற்சாகமான சாகசமாக எனக்கு இருக்கிறது. நடிகையாக நான் கேரக்டர்களின் பல்வேறு வாழ்க்கையை வாழ்கிறேன்.
அந்தக் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கிறேன். வெறும் வார்த்தை மற்றும் கற்பனையில் இருந்து உருவாகும் உலகை, திரையில் பார்ப்பதை விரும்புகிறேன். நடிகையாக நான் இந்த இடத்துக்கு வந்திருப்பது சாதாரணமானது இல்லை.
அதற்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை நோக்கி, என்னைத் தள்ளி இருக்கிறேன். இது என் உழைப்பால் வந்தது. அதனால் இப்போது இருக்கும் இந்த இடத்தை மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.