லண்டன் ஏப்ரல் 29-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கில் அர்செனல் மற்றும் மென்செஸ்டர் சிட்டி கிளப் இடையே உச்சகட்ட போராட்டம் தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாமை 2-3 என்ற கோல் கணக்கில் அர்செனல் வீழ்த்தியது.
அதேசமயம் நோட்டிங்காம் ற
கிளப்பை 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது.
இதுவரை 35 ஆட்டங்களை முடித்துள்ள அர்செனல் 80 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
34 ஆட்டங்கள் முடிவில் மென்செஸ்டர் சிட்டி,79 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி வசம் கூடுதலாக ஒரு ஆட்டம் கையில் உள்ளது.
எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்கள் முடிவில் யார் சாம்பியன் என்பது தெரிந்து விடும்.