
காளிதாஸ் சுப்ரமணியம்
ஷா ஆலம் ஏப்ரல் 29-
லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நிகல் கார்டேன், லாடாங் மின்யாக் மற்றும் லாடாங் புகிட் திங்கி ஆகிய ஐந்து தோட்டப் பாட்டாளிகளின் நேர்காணலை கண்டு மிகவும் மனம் வருந்துவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு எனக்கு கிடைத்த தகவலின்படி ஐந்து தோட்டப்புற மக்களும் குடியிருப்பு வசதியின்றி கஷ்டபடுகின்றனர் என்பதினை மாண்புமிகு நுருல் ஷஸ்வானி பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினரின் மூலம் தெரிந்துக்கொண்டேன்.
அதை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகத்திற்கும் மாநில மற்றும் மத்திய அமைச்சுக்கும், அதிகாரபூர்வ கடிதங்கள் மூலம் ஒரு சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.
அச்சந்திப்பு கூட்டம் கடந்த 13.2.2024 அன்று எனது சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பல கட்சிகளை சேர்ந்த பிரநிதிகள் மற்றும் தோட்டபுற மக்களின் பிரதிநிதிகளின் ஆலோசனையை பெற்றேன்.
இருப்பினும்
இக்கலந்துரையாடலை தோட்டபுற பிரதிநிகளுடன் மட்டுமே நான் மேற்கொண்டேன்.
ஆனால் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேரத்தில் என்னை எதிர்த்து பல காணொளிகள் வெளிவருவதைக் கேள்விப்படும் போது வேதனை அடைந்தேன்.
அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்பதற்கேட்ப எதற்கும் அஞ்சாமல் இந்நாட்டிற்கு எனது சேவையை மென்மேலும் தொடருவதோடு இந்நாட்டின் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு வருங்கால தூணாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.
மேலும், வீடமைப்பு ஊராட்ச்சி அமைச்சகம் (கே.பி.கே.தி)
சமீபத்திய நிலை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்த தொடர் நடவடிக்கையை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம்.
பெர்ஜயா வீடமைப்பு மேம்பாட்டாளர் இத்தோட்டங்களுக்கு 20 ஏக்கர் நிலம் தருவதாக கூறியுள்ளனர்.
இவ்வேளையில், பெர்ஜயா வீடமைப்பு மேம்பாட்டாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, இம்மக்கள்ளுக்கு உதவும் ஒவ்வொரு தரப்பினருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு குறிப்பிட்டுள்ளார்.
அன்புடன்
மாண்புமிகு வீ.பாப்பாராயுடு
சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர்.