அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்:

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசை வலியுறுத்தியும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம், இன படுகொலை மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றப்படும் என அமெரிக்கா உறுதியளிக்கும் வரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறப்பவதில்லை என்று கூறி கல்லூரி வளாகத்திலேயே கூடாரங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles