
உலு பெர்ணாம், ஏப் 30- உலு சிலாங்கூர் மாவட்டத்தின் உலு பெர்ணமிலுள்ளவீடமைப்பு பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்துஆடவர்கள் கைது செய்யப்பட்டதன் வழி போதைப் பொருள்விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கோங்
போப் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
குடும்ப உறவுகள் என நம்பப்படும் 21 முதல் 59 வயது வரையிலான அவர்கள் அனைவரும் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாகப் போதைப்
பொருள் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண் அகமது பைசால் தாஹ்ரிம் கூறினார்.
பெர்னாமா