தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து பெருமக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் கிள்ளான் கேபிஜே மருத்துவமனையில் அழகிய வண்ணக்கோலம் போடப்பட்டுள்ளது.
இந்த வண்ண கோலத்தை திமிர் பிடித்த ஆடவர் ஒருவர் காலணியால் மிதித்து சேதப்படுத்துகிறார்.
அதைப் பார்த்து அங்குள்ள பெண்கள் சிரிப்பது காணொளியில் தெளிவாகக் கேட்கிறது.
கோலம் என்பது இந்தியர்களின் பாரம்பரிய கலாச்சரங்களில் ஒன்று.
மருத்துவமனை நிர்வாகம் இந்தியர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் அழகிய வண்ண கோலத்தை வரைந்துள்ளது பெரிதும் பாராட்டுக்குரியது.
ஆனால் திமிர் பிடித்த ஆடவர் இந்த கோலத்தை காலணியால் மிதித்து சேதப்படுத்துவதை நெட்டிசன்கள் கடுமையாக சாடி உள்ளனர்.
இவர் மருத்துவமனை ஊழியராக இருந்தால் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த நபர் தனது செயலுக்கு ஒட்டுமொத்த மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.