
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 30-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நைகல் கார்டென், லாடாங் மிஞ்யாக் மற்றும் லாடாங் புக்கிட் திங்கி ஆகிய ஐந்து தோட்ட விடமைப்பு திட்டம் குறித்து மக்களை யாரும் குழப்ப வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு கேட்டுக் கொண்டார்.
ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் வீடு அமைப்பு திட்டத்திற்கு உதவ பெர்ஜெயா குருப் முன் வந்துள்ளது.
முன்னாள் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் நோர் ஓமார் பிரதிநிதி அகிலன் மேற்கொண்ட கணக்கு எடுப்பில் 244 தோட்டப் பாட்டாளிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பெர்ஜெயா குருப் பட்டியலில் 69 பாட்டாளிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது.
ஆனால் 500 தோட்டப்பட்டாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுவது உண்மை அல்ல என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு இன்று தெரிவித்தார்.
நமக்கு உண்மையான கணக்கு தெரிய வேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்ட நம்பிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.