பாரிஸ் நகரில் நடைபெற்ற பிரான்ஸ் பொது பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் இளம் பேட்மிண்டன் வீராங்கனை தீனா முரளிதரன் மற்றும் பியார்லி டான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இன்றிரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தீனா முரளிதரன் – பியார்லி டான் ஜோடி 21-19, 18-21, 21- 15 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் Matsumoto – Wakana ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்மையில் காமன் வெல்த் போட்டியில் இந்த ஜோடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.