
கோலாலம்பூர் மே 1-
எனது தலைமையிலான மடானி அரசாங்கம் ஒரு போதும் இந்திய சமூகத்தை ஓரம் கட்டியது இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆஸ்ட்ரோ அவானி, பெர்னாமா மற்றும் டிவி 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய ஒரு மணி நேர சிறப்பு நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.பூமிபுத்ராக்களுக்கான திட்டம் குறித்து கோபமோ அல்லது பொறாமையே கொள்ள வேண்டாம் என இந்திய சமூகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பிறந்தவர்களுக்கு குடியுரிமை இல்லை. இதற்கு அதிக அளவில் தீர்வு கண்டிருக்கிறோம்.
மித்ராவுக்கு 100 மில்லியன், தெக்குனுக்கு 30 மில்லியன், பி40 இந்திய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணம், இந்திய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமானா இக்தியார் மூலம் 5 கோடி வெள்ளி, இந்திய மாணவர்களுக்கு பெட்ரோனாஸ் கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனத்தில் ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியர்களுக்கு அரசாங்கம் உதவவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இந்திய மக்களை கவர சில தரப்பினர் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு அவர்களை தூண்டி வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பெர்னாமா