
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று தொடங்கி, இரவு மணிவரை நடந்தது.
இதில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962 மற்றும் 365 கிராம் தங்கம், 2,838 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.
மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
dinakaran