கிள்ளான் கேபிஜே மருத்துவமனையில் அழகிய வண்ணக் கோலத்தை காலணியால் மிதித்து சேதப்படுத்திய ஆடவரை போலீசார் விசாரணைக்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் விஜயராவ் தெரிவித்தார்.
இந்த வண்ண கோலத்தை திமிர் பிடித்த ஆடவர் ஒருவர் காலணியால் மிதித்து சேதப்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றுமை மற்றும் சுபிட்சத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த கொண்ட குற்றத்திற்காக போலீசார் இவரை விசாரிக்கும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் ஊழியர்களிடம் சமரசம் செய்து கொள்ளப்படாது என்று கிள்ளான் கேபிஜே மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது