
சிரம்பான், மே 03:
அனைவரும் தமிழ் நாளேடுகளை வாங்கி ஆதரவு தர வேண்டும் என்று தாமரைக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ரெனா . இராமலிங்கம் பேசினார்.
தமிழ்ப் பத்திரிகை உலகின் நாயகன் இளைய தமிழவேள் ஆதி. குமணனின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா தொழிலாளர் தினமான மே 1- ஆம் நாள் மாலையில் சிரம்பானில் நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழியல் எழுத்தாளர் மன்றம் மற்றும் மலேசிய பைந்தமிழ்க் கழகம் ஆகியத் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.
திட்டமிட்டபடி மாலை 5:30 அளவில் தமிழ் வாழ்த்து, நடனத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில், நெகிரி மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கருணாகரன் வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து,நெகிரி மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் அமுத இளம்பரிதி தலைமை உரையாற்றினார்.மலேசிய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் அரசியல்வாதியுமான டாக்டர் ஞானபாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார்.
காலமறிந்து- ஒருவரின் தேவை அறிந்து உதவும் தன்மைப்கொண்ட ஆதியின் குணநலன்கள், பத்திரிகைப் போராட்டம் குறித்தெல்லாம்.
அவருக்குப் பின், ரெனா. ராமலிங்கம், அடுத்த சிறப்புரை ஆற்றிய வேளையில், ஆதியின் சிறப்பியல் குறித்தும் பேசினார்.ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்து, தமிழ் ஊடகத்தினர் மற்றும் வாசகர் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற மலாக்கா முத்து கிருஷ்ணன், சிரம்பான் வழக்கறிஞர் ம.சிவராம் ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் டாக்டர் ஞானபாஸ்கரன் சிறப்பு செய்யப்பட்டனர். நெகிரி சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் எம்.ரவி, டத்தோ ரெனா இருவரும் இவருக்கு சிறப்பு செய்தனர்