
ஜோர்ஜ் டவுன், மே 5- பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற அனைத்துலக ஊகடக் செய்தியை அரசாங்கப் பேச்சாளரான அவர் மறுத்தார்.
கடந்த வாரத்திலும், அதற்கு முந்தைய வாரங்களிலும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.
இது குறித்து நான் விரிவாக ஆய்வு செய்தேன். நானும் அமைச்சரவை உறுப்பினர் என்பதால் இந்த விலை ஏற்றம் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அரசாங்கம் அறிவிப்பதற்கு முன் நீங்கள் முந்திக் கொண்டு அறிக்கை விடாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.
bernama