26 ஆண்டுகளாக போராடுகிறோம்!எங்கள் வீட்டு பிரச்சனையை தீர்த்து வையுங்கள்- பிளட்டா ரீவர் பாட்டாளிகள் கோரிக்கை

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 6-
லாடாங் சுங்கை பெலாட்டாவைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட தோட்டப் பாட்டாளிகள் இன்று கோலா குபு பாருவில் கூடி, சிலாங்கூர் மாநில அரசு மற்றும் வீட்டுவசதி மற்றும் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சிடம் (KPKT) நீண்ட காலமாக தீர்க்கப்படாத எங்கள் வீட்டு பிரச்சனையை தீர்க்கும்படி வலியுறுத்தினர்.

பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் உதவியோடு இவர்கள் இன்று களத்தில் இறங்கினர்.

2001இல் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 64 முன்னாள் பிளட்டா ரீவர் தோட்ட தொழிலாளர்களுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை.

“1994 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பைப் பெற்றதில் இருந்து இந்தப் பிரச்சினை நடந்து வருகிறது.

2001 ஆம் ஆண்டில், 64 முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் Syarikat Lembah Beringin Sdn Bhd ஆகியோருக்கு இடையே குறைந்த விலைக்கான வீடு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் (S&P) கையெழுத்தானது.

“ஆனால் 2003 இல் Lembah Beringin Sdn Bhd திவாலானது. மேலும் 2005 இல் Lembah Beringin Sdn Bhd இன் தாய் நிறுவனமான Land & General Bhd, இந்த 64 முன்னாள் ஊழியர்களுக்கு பங்களா நிலங்களை வழங்குவதாக உறுதியளித்தது.

“இதுவரை எந்தவொரு மேம்பாடும் இல்லை. 26 ஆண்டுகளாக , எந்தவொரு அரசியல் கட்சியும் இதை தீர்க்க முயற்சிக்கவில்லை.

பிளாட்டா ரீவர் தொழிலாளர்கள் பிரச்சினைடை தீர்க்க அரசாங்கம் தலையிடும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அருட்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் தொழிலாளர்களில் பலர் தற்போது வேலையில்லாமல் பி40 பிரிவில் உள்ளதால் வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் பெற முடியாமல் உள்ளனர் என்று அவர் சொன்னார்.

பிளாட்டா ரீவர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க
PRM வேட்பாளர் ஹபிசா ஜைனுடின் மற்றும் சுயேச்சை வேட்பாளர் Nyau Ke Xin ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாசிர் கூடாங் கெஅடிலான் நாடாளுமன்ற ஹசான் க்ரீம் மற்றும் புக்கிட் மெலாவாத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டு பாட்டாளிகளிடமிருந்து விவரங்கள் கேட்டரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles