
செ வே. முத்தமிழ் மன்னன்
பூச்சோங், மே 7-
நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
தேசிய வகை காசல்பீல்டு தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்படும் இந்த பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நாளை மே 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார்கள்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
6.1 ஏக்கர் நிலப்பரப்பில் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளி சுமார் 3 கோடி வெள்ளியில் மிகவும் கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது.
பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியில் இப்போது 750 மாணவர்கள் பயல்கிறார்கள் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கற்பகம் தலைமையில் இந்த பள்ளி சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது.
தற்போது பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வழங்கப்பட்ட 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பள்ளி கட்டப்படுகிறது என்று அவர் சொன்னார்.