கோலாலம்பூர், மே 7-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அல்பெர்ட் மற்றும் கூகுளின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட்டுடன் நேற்று இயங்கலை வாயிலாக மாநாட்டை நடத்தினார்.
கடந்தாண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த மாநாடு அமைந்தது என்று
நிதியமைச்சருமான அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
அரசாங்கத்தின் தொலை நோக்கு திட்டம் மற்றும் இலக்கு குறித்த பிரதமரின் முந்தைய விளக்கத்தின் அடிப்படையில் மலேசியாவில் விரிவாக்கக்கூடிய துறைகளின் செயல் திட்டங்களின் மேம்பாடு குறித்து ரூத் விவரித்தார்.
கடந்த சந்திப்பிலிருந்து மலேசிய அரசாங்கம் வழங்கி வரும் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் பணிகை எளிதாக்குவதற்கான வேகத்தை அல்பெர்ட் மற்றும் கூகுள் மிகவும் வரவேற்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
பெர்னாமா