
புத்ராஜெயா, மே 7:
அரசு ஊழியர்கள் திறமையாகவும் விரைவாகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றினால் நாட்டின் பொருளாதாரம் சிறப்பானதாக மாறும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் அன்றாட பணிகளில் இந்த நடைமுறையை கடைப்பிடித்தால், முதலீட்டில் மலேசியா உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று நிதியமைச்சர் அன்வார் வலியுறுத்தினார்.
“எனவே சகோதரர்களே, இதில் கவனம் செலுத்துங்கள், நமது பொருளாதாரம் மாறும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
“சகோதர சகோதரிகளே, நீங்கள் திறமையாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும். ஏனென்றால், மலேசியா இப்போது சர்வதேச அளவில் மட்டுமின்றி முதலீட்டின் அடிப்படையில் நம்பிக்கையையும் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
நிதி அமைச்சுடன் இன்று இடம்பெற்ற மாதாந்திர சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
– பெர்னாமா