ஜோகூர் பாரு, மே 8 – ஜோகூர் தாக்ஸிம் குழுவின் (ஜே.டி.டி.) விளையாட்டாளரான ஷாபிக் ரஹிமின் கார் கண்ணாடி அடையாள தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் ஸ்ரீ கெலாங்கில் நேற்றிரவு நிகழ்ந்தது.
நேற்றிரவு 10.05 மணியளவில் ஸ்ரீ கெலாம் ஜே,டி.டி. பயிற்சி
மையத்திலிருந்து ஹோண்டா சிட்டி காரில் பந்தாய் லீடோ நோக்கி
சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இத்தாக்குதல் தொடர்பில் ஷாபிக்
போலீசில் புகார் செய்தார்.
தாம் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில்
அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் தம்மைப் பின்தொடர்ந்து
வந்ததாகவும் அவர்களில் ஒருவன் சுத்தியலால் காரின் பின்புறக்
கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் சொன்னார்.
bernama