
செந்தூல் ஸ்ரீ கிளாந்தான் அடுக்குமாடி அருகில் இருக்கும் டியூக் பாலத்தின் கீழ் மாற்றுத்திறனாளி ஜெயா என்கிறவர் நடத்திவந்த காலை சிற்றுண்டி கடைக்கு குந்தகம் ஏற்படும் வண்ணம் அரசியல் கூடாரம் அங்கு அமைத்தது ஏன்?.அது குறித்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கேள்வியை எழுப்பினார்..
வியாபாரம் செய்யும் இடத்தில் அரசியல் கூடாரம் அமைத்து பிரச்சாரம் செய்து வருவதால், வியாபாரம் செய்ய முடியாமல் நஷ்டம் அடைந்து வருவதாக செந்தூல் காவல் துறையிடம் ஜெயா வடிவேலு புகார் செய்து இருக்கிறார்.
மாற்றுத்திறனாளி ஆக இருக்கும் ஜெயா வடிவேலு என்கின்றவருக்கு நான் தான் சிறு தொழில் செய்ய டிபிகேஎல் இடமிருந்து அனுமதி வாங்கி தந்தேன்.
தற்போது இந்த மாதிரி ஒரு அரசியல் கூடாரங்கள் அமைப்பதை நான் குறை கூறவில்லை இருப்பினும் மக்கள் வியாபாரம், குறிப்பாக ஒரு மாற்றுத்திறனாளி பிழைப்பில் மண் போடுகிறோம் என்ற எண்ணம் வேண்டாமா?
இப்படி பட்டவர்கள் மக்களின் நலனை எப்படி காப்பார்கள்? அதனால், இதுபோன்ற கூடாரங்கள் அமைப்பதை கண்டிப்பதாக என்று அவர் தெரிவித்தார்.