
கோலாலம்பூர், மே 9 ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் மரம் விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இ-ஹெய்லிங் ஓட்டுனர் (26 வயது ஆடவர்) காலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் அவரது பயணியான 72 வயதான ஸ்வீடன் பெண் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என டாங் வாங்கி மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் நஸ்ரோன் அப்துட் யூசோவ் கூறினார்.
“இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
bernama