
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 9-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இன்று பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் இந்திய சமூகத்துடன் மாபெரும் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.
இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை பத்தாங் காலியில் நடைபெறும் இந்த பிரச்சார கூட்டத்தில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொள்கிறார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன் உட்பட பல முக்கிய தலைவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கைரூல் ஆற்றும் உரையை கேட்க மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.