
புக்கிட் மெர்தாஜம், மே 9- இங்குள்ள குவார் பெராஹூ, குபாங் செமாங்கில்
உள்ள வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது
மாற்றுத் திறனாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான அந்த 40 வயது நபர்
கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் வீட்டின்
அறை ஒன்றில் இறந்த கிடக்கக் காணப்பட்டதாக செபராங் பிறை தெங்கா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் கூறினார்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக சந்தேகிக்கப்படும்
கொள்ளையர்கள் அந்த மாற்றுத் திறானளியின் தாயாரையும்
கை,கால்களைக் கட்டி மற்றொரு அறையில் அடைத்ததாக அவர்
சொன்னார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபர்
ஒருவரை தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாகக் கூறிய
அவர், அவ்வாடவருக்கு எதிராக குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள்
தொடர்பில் 10 முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ளது விசாரணையில்
தெரியவந்துள்ளது என்றார்.
bernama