வாஷிங்டன்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலி மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர்.
அதன் பின்னர் இஸ்ரேல் காசா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. வான்வழித் தாக்குதலாக ஆரம்பித்து தரைவழித் தாக்குதலிலும் இறங்கியது. காசாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ‘’
இந்நிலையில், “ரஃபாவுக்குள் முன்னேறினால் இனிமேல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Cnn