நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட பத்து அம்னோ தலைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு 8.30 மணிக்கு தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
இதில் தஞ்சோங் காராங் எம்.பி. நோர் ஓமார், பாசிர் சாலாக் எம்.பி.தாஜூடீன் அப்துல் ரஹ்மான், தெக்காரா எம்.பி. டாக்டர் அடாம் பாபா, கோத்தா திங்கி எம்.பி. ஹலிமா, கெத்தாரே எம்.பி. அனுவார் மூசா, கோல கங்சார் எம்.பி. மாட்சூரா, ஆராவ் எம்.பி. சஹிடான் காசிம் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் இவர்கள் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் எங்களால் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.