பினாங்கு மாநிலத்தில் ஜசெக கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ து.லோகநாதன் போட்டியிடுகிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் செமாங்காட் கூட்டணி சார்பில் ஐபிஎப் போட்டியிட்டது.
அதன் பின்னர் 32 ஆண்டுகள் கழித்து பொதுத் தேர்தலில் ஐபிஎப் கட்சி போட்டிடுவது இதுவே முதல் முறையாகும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இம்முறை ஐபிஎப் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராயர் போட்டியிடுகிறார்.