நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
அம்னோ, மசீச, ஐபிஎப், மக்கள் சக்தி கட்சி, கிம்மா போன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இரவு ஒன்பது மணிக்கு மாநாட்டு மண்டபத்திற்கு தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேசிய முன்னணி தலைவர்கள் புடைசூழ வந்தனர்.
ஆனால் இந்த கூட்டத்தில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான
ம இகா வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம இகா போட்டியிட்ட சுங்கை பூலோ மற்றும் காப்பார் நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனிடையே நாளை நவம்பர் 2 ஆம் தேதி ம இகா மத்திய செயலவை கூட்டம் நடைபெறுகிறது.
பொதுத் தேர்தலில் ம இகா போட்டியிடுமா என்பது தொடர்பில் நாளைய கூட்டத்தில் ம இகா முடிவு செய்கிறது