
கோலாலம்பூர், மே 13-
நாட்டில் இந்த ஆண்டு மே 4ஆம் தேதி வரை காசநோயால் 8,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் சபா மாநிலத்தில் மட்டும் 1,944 பேர் அல்லது 21.9 விழுக்காட்டினர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மலேசியாவில் காசநோய் முக்கியக் கவலையாய் நீடிப்பதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்லி அமாட் கூறினார். காசநோயைக் கொண்டுவரும் கிருமிகள் காற்றில் பரவுகின்றன.
எனவே தொடர்ந்து 2 வாரத்துக்கு இருமல், காய்ச்சல், இரவில் வியர்ப்பது, பசியின்மை, உடல் எடை குறைதல், சளியில் ரத்தம் முதலிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுமாறு அமைச்சர் ஆலோசனை கூறினார்.
உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் அது மரணத்தை விளைவிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
பெர்னாமா