லண்டன், மே 13-
இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் அர்செனல் 1-0 என்ற கோல்கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை அதன் அரங்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 37 ஆட்டங்கள் முடிவில் 86 புள்ளிகளுடன் அர்செனல் முதல் இடத்தில் உள்ளது.
36 ஆட்டங்கள் முடிவில் மென்செஸ்டர் சிட்டி 85 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் கைவசம் உள்ளதால் மென்செஸ்டர் சிட்டி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் உள்ளது.
எதாவது ஒரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி டிரா காண நேரிட்டால் அது அர்செனல் கிளப்புக்கு கொண்டாட்டமாக அமைந்துவிடும்.
வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த தவணைக்கான இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டி முடிவடைகிறது. யார் சாம்பியன் என்பது இந்த வாரத்தில் தெரியவரும்.
பிபிசி